உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறிவியல் ஆற்றலை மெய்ப்பித்த சென்சுரி பள்ளி மாணவர்கள்

அறிவியல் ஆற்றலை மெய்ப்பித்த சென்சுரி பள்ளி மாணவர்கள்

திருப்பூர்;திருப்பூர் வேலவன் பள்ளியில், 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' என்ற தலைப்பில், மாணவ, மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி நடத்தப்பட்டது.மேயர் தினேஷ் குமார், துவக்கி வைத்தார். இதில், 6 முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் அறிவியல் அறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த ஆற்றலை வெளிக்கொணரும் வகையில், கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், சென்சுரி பள்ளி மாணவர்கள், ஏழு குழுக்களாக தங்களது, படைப்புகளை காட்சிப்படுத்தினர். சுற்றுச்சூழல் மாசுக்கான காரணங்கள், தடுக்கும் விதம், ஒளி சார்ந்த மின்தடை வாயிலாக மின்னாற்றலை சேமிப்பது, மாற்று எரிபொருளை பயன்படுத்தி மின்னாற்றலை சேமிப்பது, சூரிய மின்னாற்றல் வாயிலாக செடி, கொடிகளுக்கு நீர் பாய்ச்சும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு புதிய யோசனைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.பிளஸ் 1 மாணவர்கள், நஞ்சுக்கொடி வாயிலாக ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு, உயிர் அணுக்கருவிகளால் தசைகள் உருவாக்கப்படும் அறிவியலை விளக்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.---கண்காட்சியில், சென்சுரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ