உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில்முனைவோர் லட்சியம் ;மாணவியர் வளர்க்க வேண்டும்

தொழில்முனைவோர் லட்சியம் ;மாணவியர் வளர்க்க வேண்டும்

திருப்பூர்;திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சுய தொழில் முனைவோர் மேம்பாட்டு துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சிபிலிப் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அழகுக்கலை நிபுணர் சூர்யாதங்கராஜ், குத்து விளக்கேற்றி வைத்து பேசுகையில், 'கல்லுாரியில் படிக்கும் இளம் பெண்கள், தன் முனைப்புடன் செயல்பட்டால், நல்ல தொழில் முனைவோராக வர முடியும். கல்லுாரியில் படிக்கும் போதே தான் ஒரு தொழில் முனைவோராக வர வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.வணிக நிர்வாகவியல் துறை தலைவர் பூர்ணிமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ