உள்ளூர் செய்திகள்

மாணவியர் அவதி

அவிநாசி : அவிநாசியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால், கால்நடை மருத்துவமனை பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் சீனிவாசபுரம் - பாரதிதாசன் வீதி முன்ஆறு போல பெருக்கெடுத்தது.இதனால் நடந்து செல்பவர்களும் டூவீலரில் செல்பவர்களும் சிரமப்பட்டனர். சாலையில் ஓடிய சாக்கடை கழிவுநீர் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதி முன்பாக குளம் போல தேங்கி மாணவிகள் உள்ளே நுழைய முடியாமல் சூழ்ந்தது. ஒரு அடி உயரத்துக்கும் மேலாக கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் எழும்பியது. முறையான சாக்கடை கால்வாய் இணைப்பு இல்லாததால் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் மழை நீர் சாக்கடையில் புகுந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி