உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருடனுக்கு இப்படி ஒரு சோதனை

திருடனுக்கு இப்படி ஒரு சோதனை

திருப்பூர் : திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையத்தில் இ-பைக் ஷோரூம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பைக் வாங்க வந்த நபர், ஓட்டிப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். அவருக்கு சோதனை ஓட்டத்துக்கான பைக்கை கொடுத்தனர்.பைக்குடன் வெளியே வந்த நபர், ஓட்டி பார்ப்பதாக கூறி, தப்பிச்சென்றார். பைக்கை திருடி சென்ற வாலிபர், சார்ஜ் இல்லாததால், பெருமாநல்லுார் அருகே நிறுத்தி விட்டு தப்பியது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ