உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வீடு கட்ட முடியாமல் அவதி

இடத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வீடு கட்ட முடியாமல் அவதி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 56வது வார்டு, கடுகுக்காரர் தோட்டம் பகுதியில் மனைப்பிரிவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், மனை உரிமையாளர்கள் பல ஆண்டாக பரிதவிக்கும் நிலை காணப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி, 56 வது வார்டு, செரங்காடு பகுதியில் கடுகுக்காரர் தோட்டம் குடியிருப்பு உள்ளது.நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. செரங்காடு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வழியாக காங்கயம் ரோடு பிரதான வடிகாலில் இணைந்து சங்கிலிப்பள்ளம் ஓடையில் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டது.இருப்பினும், கடுகுக்காரர் தோட்டம் பகுதி தாழ்வாக உள்ள நிலையில், இரு பகுதிகளிலிருந்தும் சேகரமாகும் கழிவுநீர் முறையாக வடிகாலில் செல்லாமல், தாழ்வான உள்ள பகுதிக்கு வந்து மனைப்பிரிவில் புகுந்து விடுகிறது. இதனால், 30 அடி அகல பொது வழித்தடம் வழியாகச் சென்று மனையிடங்களில் 5 அடி ஆழத்துக்கும்மேல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.கடந்த, 15 ஆண்டுக்கு முன்னர் அமைத்த இந்த மனைப்பிரிவில், 'சைட்'களுக்கு செல்லக் கூட வழியின்றி, இடம் வாங்கியவர்கள் வீடு கட்ட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு மற்றும் புழுக்கள் அருகேயுள்ள கட்டடங்களில் புகுந்தும் அவதி ஏற்படுத்துகிறது. வழிப்பாதையே கழிவுநீர் செல்லும் வழியாக மாறி, செடிகள் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.மழை நாட்களில் இந்தப் பகுதியில் மேலும் தண்ணீர் தேங்கி கடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, முறையாக வடிகால் அமைத்து கழிவு நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி