உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு

கோடை விடுமுறை நிறைவு; கோர்ட்கள் இன்று திறப்பு

திருப்பூர்;கோடை விடுமுறை முடிந்து திருப்பூர் மாவட்ட கோர்ட்கள் இன்று முதல் இயங்கவுள்ளன.திருப்பூர் பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம் அருகே, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் உள்ளிட்ட மாவட்ட கோர்ட்கள், உரிமையியல், குற்றவியல் நடுவர் உள்ளிட்ட பல்வேறு கோர்ட்கள் உள்ளன.இங்குள்ள கோர்ட்களுக்கு வழக்கம் போல் கோடை விடுமுறை கடந்த மே முதல் தேதியில் துவங்கியது. இந்த விடுமுறைக்குப் பின் இன்று முதல் அனைத்து கோர்ட்களும் வழக்கம் போல் செயல்படும்.கோடை விடுமுறையிலும் விடுமுறை கால சிறப்பு அமர்வுகள் செயல்பட்டன. மகிளா கோர்ட், வன்கொடுமை வழக்கு விசாரணை சிறப்பு கோர்ட் ஆகியவற்றிலும் விசாரணைகள் நடந்தன. கிரிமினல் வழக்கு விசாரணை கோர்ட்களும் இயங்கின. சிவில் வழக்கு விசாரணை கோர்ட்கள் விடுமுறை காரணமாக இயங்கவில்லை. கோடை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இவை அனைத்தும் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும்.--

புதிய நீதிபதிகள்

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகப் பணியாற்றிய சொர்ணம் நடராஜன், சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நாமக்கல் முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் லோக்அதாலத் நிரந்தர நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது. இப்பதவிக்கு நாகர்கோவிலில் பணியற்றிய மலர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி காலிப்பணியிடத்தில், ஊட்டியில் பணியாற்றிய ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். திருப்பூர் குடும்பநல கோர்ட் நீதிபதி சுகந்தி, ஈரோடுக்கு மாற்றப்பட்டதையடுத்து, கடலுாரில் பணியாற்றிய பிரபாகர் இங்கு நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இங்கு தங்கள் பணியைத் துவங்கவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை