உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதி.மு.க., உற்சாகம்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதி.மு.க., உற்சாகம்

திருப்பூர்: கடந்த 2009ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, எஸ்.சி., இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில், அந்த ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வெளியானது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வரவேற்று திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அவிநாசி சுற்றுப்பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில், மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கினர்.வடக்கு மாநகர தி.மு.க., சார்பில், பாண்டியன் நகர், வாவிபாளையம் அருந்ததியர் காலனியில், வடக்கு நகர செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கினர்.தாராபுரம் கவுண்டச்சி புதுார் ஊராட்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கியும், கட்சிக் கொடி ஏற்றியும் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை