ஆன்மிகம்கும்பாபிஷேகம் விழாஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, ராஜகோபுர, துவார பூஜை, கோபுர வாயில் திறப்பு - காலை, 9:00 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம், 12:00 மணி, மூன்றாம் காலயாக பூஜை, விக்னேஸ்வர பூஜை - மாலை, 6:00 மணி. பிரசாதம் வழங்குதல் - இரவு, 9:00 மணி.* ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரிய ஒலப்பாளையம், வடுகபாளையம், அவிநாசி. மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், மகா தீபாராதனை - காலை, 6:30 மணி, கலச புறப்பாடு - காலை, 9:15 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 9:30 மணி, ஆன்மீக சொற்பொழிவு - காலை, 10:00 மணி, சிறப்பு அலங்காரம், கோ பூஜை, அன்னதானம் - காலை, 11:00 மணி.* ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில், சாமாளாபுரம, பல்லடம். முளைப்பாலிகை, புத்துமண் எடுத்தல், வாசுதேவ புண்யாகம், வாஸ்து பொம்மை இழுத்தல், முதற்கால யாக வேள்வி - மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணிக்குள்.* பெரிய நாச்சியம்மன் கோவில், உப்பிலிபாளையம், கருவலுார். திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல் - மதியம், 2:30 மணி, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:00 மணி.* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மல்லியம்மன் கோவில், அரும்பாளையம், ஊத்துக்குளி. மங்கள இசை, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை - காலை, 6:30 மணி, கலசங்கள் புற்பாடு, கும்பாபிஷேகம் - காலை, 9:00 முதல், 9:20 மணிக்குள். விமான கோபுர மஹா கும்பாபிஷேகம் - காலை, 9:40 மணி, பிரசாதம் வழங்குதல் - காலை, 10:15 மணி.பிரதிஷ்டை விழாஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், அம்மன் நகர், பொங்குபாளையம் கிராமம், திருப்பூர். மஹா அபிஷேகம், அன்னதானம் - காலை, 9:15 மணிக்கு மேல், 10:15 மணிக்குள்.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கை பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.பொதுகலந்தாய்வு கூட்டம்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், அப்பாச்சி நகர், திருப்பூர். காலை, 12:00 மணி. பங்கேற்பு: மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் தாஸ், மாநில எம்.எஸ்.எம்.இ., செயலர் அர்ச்சணா பட்நாயக், தொழில் துறை கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் கிறிஸ்துராஜ்.திறப்பு விழாபயிற்சி மற்றும் பரிசோதனை கூடம் திறப்பு விழா, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், ராயபுரம், திருப்பூர். காலை, 9:15 மணி. பங்கேற்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல்.காத்திருப்பு போராட்டம்கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிலாளர்கள் சங்கம்.மின்வாரிய குறைகேட்பு கூட்டம்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை, 11:00 மணி.'சிசிடிவி' கேமராஇயக்கம் துவக்கம்ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீபுரம் அறக்கட்டளை.