உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு

தமிழுக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு

பல்லடம்:பல்லடம் அரசு கலை கல்லுாரியில், மாணவர் பேரவை துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி தலைவர் கவிதாமணி, சி.ஆர். கார்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி பேசியதாவது:கற்களால் கட்டப்படுவது கட்டடம்; கோபுரங்களால் கட்டப்படுவது கோவில். அதுபோல், ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கட்டப்படுவதே கல்விக்கூடம். உலகில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.ஆனால், தமிழ் மொழிக்கு மட்டுமே தாய்மொழி என்ற சிறப்பு உள்ளது. அன்றைய காலத்தில் பெண்கள் பட்டப்படிப்பு படிப்பது என்பதே கானல் நீராக இருந்தது. அதையெல்லாம் உடைத்தெறிந்து இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஒரு பெண் படித்தால் அந்த சமுதாயமே மேம்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை