உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா கும்பலுக்கு குறி; ரயில்களில் கடத்தல் அம்பலம்: தனிப்படை தீவிர வேட்டை

கஞ்சா கும்பலுக்கு குறி; ரயில்களில் கடத்தல் அம்பலம்: தனிப்படை தீவிர வேட்டை

திருப்பூர்; வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு விற்பனைக்காக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வருபவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரமாகியுள்ளதால், கஞ்சா, குட்கா, ெஹராயின் என போதைப்பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடத்தல்காரர்கள் சிக்கினாலும், 'திமிங்கிலங்கள்' சிக்காததால், கடத்தல் தொடர்கிறது.கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும், திருப்பூரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் பொறுப்பேற்ற பின், குற்றங்களை களையவும், கண்டறியும் வகையில், மூன்று தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீசார் தினமும் ஓட்டல், லாட்ஜ்களை சோதனை செய்து, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் வைத்திருந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.அதிரடி சோதனை விளைவாகவும், கைது செய்யப்படும் நபர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒடிசா, பீஹார், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் எளிதாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய திருப்பூருக்கு கடத்தி வருவது தெரிந்தது.சில வாரங்களாக, காலை, மாலை, இரவு என, வெளிமாநிலத்தில் இருந்து வரும் ரயில்களில் வடமாநிலத்தினர், சந்தேகப்படும் நபர்கள் போன்றோரை 'மப்டி'யில் போலீசார் கண்காணிக்கின்றனர். தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள் படி, போதைப்பொருட்களை கடத்தி வரும் நபர்களை சுற்றி வளைத்து பிடிக்கின்றனர். சில நாட்கள் முன், ஹெராயின் கடத்தி வந்த வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.''தேடுதல் வேட்டையில் பலர் சிக்கினாலும், ''திமிங்கிலங்கள்' சிக்குவதில்லை. இதனால், கடத்தல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது'' என்கின்றனர் போலீசார்.

7 கிலோ சிக்கியது

நேற்று, ஜார்க்கண்டில் இருந்து கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவது குறித்து தெரிந்து, திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். ரயிலில் இருந்து இறங்கி, பயணிகளுடன் பயணிகளாக வெளியேறிய ஒடிசா வாலிபரை பிடித்தனர். அவரது பெயர், உத்தம் மகனாந்தா, 21. அங்கிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில், அதே ரயிலில் வந்த கடலுாரை சேர்ந்த ஜெயசீலன், 22, விக்ரம், 25 என, இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா வாலிபருடன், கடலுாரை சேர்ந்த, இரு வாலிபரும் ஒடிசாவுக்கு சென்று அங்கு குறைந்த விலைக்கு வாங்கி வந்து, இங்கு இரு மடங்கு அதிகமாக விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிந்தது. இருவரும் சப்ளை செய்பவர்களா அல்லது இவர்களை யார் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
பிப் 26, 2025 23:26

ரோட்டில் நின்று கொண்டு ஹெல்மெட் போடாதவர்களை மட்டும் பிடித்துக் கொண்டு இருந்தால் இப்படித்தான் நடக்கும்


சமீபத்திய செய்தி