உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்பனை ;டெய்லர் கைது

கஞ்சா விற்பனை ;டெய்லர் கைது

திருப்பூர்:கஞ்சா விற்றதாக, பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், ஆத்துப் பாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அப்பகுதியினர் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ நுாறு கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த தீபபாரதி, 33, என்பது தெரியவந்தது. பனியன் நிறுவன டெய்லராக பணிபுரிந்து கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ