உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விருந்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விருந்து

திருப்பூர் : திருப்பூரில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, கேசரி, முட்டையுடன் ஆசிரியர்கள் விருந்து வழங்கி உபசரித்தனர்.திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகேயுள்ள வாவிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டு துவங்கியதும், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்படும்.இந்தாண்டு ஜூன் மாதம் கல்வியாண்டு துவங்கினாலும், தொடர்ந்து பள்ளியில் அட்மிஷன் நடந்து கொண்டிருந்ததால், விருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை.கடந்த வாரம், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி ஏற்பாட்டில், சத்துணவில் வெஜ் பிரியாணி, தயிர் சாதம், கேசரி, முட்டை தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறையில் இருந்தும், மாணவ, மாணவியரை பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வந்து வாராண்டாவில் அமர வைத்து வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டது.இன்முகத்துடன் ஆசிரிய, ஆசிரியை உணவு பரிமாறினர். சாப்பிட்டு முடித்த பள்ளி குழந்தைகள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பள்ளி உடற்கல்வி இயக்குனர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி