| ADDED : ஜூலை 23, 2024 11:40 PM
திருப்பூர்;தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தில் உள்ள வேளாண் மகளிருக்கான, 5 நாள் பயிற்சி துவங்கியது.பயிற்சியை வேளாண்மை பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் டாக்டர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பின், பட்டியல் இன விவசாயிகளுக்கு மண்வெட்டி, அறுவடைக்கான படுதாக்கள் மற்றும் புல்வெட்டும் கருவிகள், தென்னை மரக்கன்றுகள் ஆகியவை பட்டியல் இன துணை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் துக்கையண்ணன், கலையரசன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.இதில், மாநில ஊரக வாழ்வாதார திட்ட மகளிர், 30 பேருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சியும், இயற்கை விவசாயத்தில் உயர் விளைச்சல் பெறும் தொழில்நுட்பங்கள், இயற்கை முறை பூச்சி நோய் கட்டுப்பாடு, மண் வளம், இயற்கை சார்ந்த வேளாண் காடுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.