திருப்பூர்:திருப்பூரில், சிறுமி, இளம்பெண்களை காதலிப்பதாக பழகி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் வாலிபர் கொல்லப்பட்டது தொடர்பாக, போலி நிருபர், இலங்கை அகதி உட்பட, 11 பேரை போலீசார் கைதுசெய்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் அன்பு, 23. திருப்பூர், கணக்கம்பாளையத்தில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றி அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர். சிறுமிகளின்ஆபாச வீடியோ
கமிஷனர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். அன்புவின் நண்பர்கள் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. கொலை செய்யப்பட்ட அன்பு, சிறுமி, இளம்பெண்கள் உள்ளிட்ட பலரிடம் நன்றாக பேசி பழகி, அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோக்களை எடுத்து வைத்து வந்தார்.நண்பனான தமிழ்செல்வன் பழகி வந்த, 14 வயது சிறுமி மற்றும் மற்றொரு நண்பனின் தங்கையிடம் அன்பு பழகி வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக, எழுந்த பிரச்னையில் அன்புவுடன் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நடந்தது தெரிந்தது.கொலை தொடர்பாக, தமிழரசன், 23, இலங்கை அகதி இந்துஜா, 24, போலி நிருபர் பிரசன்னா, 25, சூரியமூர்த்தி, 27, ரஞ்சித்குமார், 25, அங்கேயர் லட்சுமணன், 36, ஜெயலட்சுமணன், 29, ருத்ரமூர்த்தி, 24, உதயதர்ஷன், 24, அருண், 37, அஜீத், 22 என, 11 பேரை போலீசார் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள செல்லதுரை உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.