உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணை தள்ளி விட்டு நகை பறித்த ஆசாமிகள்

பெண்ணை தள்ளி விட்டு நகை பறித்த ஆசாமிகள்

பொங்கலுார் : திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மனைவி ஸ்ரீதேவி, 48. திருப்பூர், தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் பகுதியில் டூவீலரில் சென்றபோது, பின்னால் டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வழி கேட்டு பேச்சு கொடுத்தனர். பின்னால் அமர்ந்திருந்த நபர் வாகனத்தை காலால் உதைத்து கீழே தள்ளியுள்ளார். பின் ஸ்ரீதேவி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை