மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
26-Aug-2024
அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலுார் - சூரிபாளையத்தில் உள்ள அப்பார் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, 89வது அரங்கேற்ற நிகழ்ச்சியாக சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், வள்ளி கும்மி, கம்பத்தாட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கோவை சரவணம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி துவக்கி வைத்தனர். இதில் இயற்கை வேளாண் விஞ்ஞானி சூலுார், காளியாபுரம் மயில்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.கலை விழாவை, சங்கமம் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் ஒருங்கிணைத்து ஏற்பாட்டினை செய்திருந்தார். ஒயிலாட்டம், வள்ளிக்கும்மி,கம்பத்தாட்டத்தில் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக நடனமாடினர்.
26-Aug-2024