உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்பு துறை அதிரடி தொடர்கிறது

உணவு பாதுகாப்பு துறை அதிரடி தொடர்கிறது

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் போலீசார், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.கடந்த, ஜூன் 1 முதல் கூட்டு ஆய்வில், 78 கடைகளிலிருந்து, 620 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு 'சீல்' மற்றும் 21 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.தொடர் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று ரத்து செய்யப்படும்.உள்ளாட்சி துறையில் வழங்கப்படும் 'டிரேடு லைசென்ஸ்' ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களது புகார்கள் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ