உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எமனாக மாறிய மொபைல் போன்

எமனாக மாறிய மொபைல் போன்

திருப்பூர்;திருப்பூர், காலேஜ் ரோடு, சலவை பட்டறை ரயில்வே தண்டவாளம் அருகில் முட்புதரில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில், இறந்தவர் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அழகேசன், 25; சலவை பட்டறை பகுதியில், தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 21ம் தேதி சக ஊழியர் ஒருவரிடம், வீட்டுக்கு போன் பேச வேண்டும். என கூறி மொபைல் போனை வாங்கி சென்றுள்ளார். திரும்பி வராததால், போனை திருடி சென்று விட்டதாக நினைத்து, அவரை தேடாமல் விட்டு விட்டனர். ஆனால், அழகேசன், போன் பேசியபடி சென்ற போது, ரயிலில் அடிபட்டு துாக்கி வீசப்பட்டு இறந்துள்ளார். ரயில் மோதியதில், அவரது இடது கை சிதைந்து போய் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி