உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூக்கள் விலை குறைந்தது

பூக்கள் விலை குறைந்தது

திருப்பூர்:பூக்கள் வரத்துஅதிகரித்துள்ள நிலையில், சீசன் இல்லாததால், பூ விற்பனை மந்தமாகி, பூக்கள் விலை குறைந்துள்ளது.வெயிலின் தாக்கம் குறைந்து, கடந்த சில நாட்களாக, துாறல் மழை, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், ஆடி மாதம், முகூர்த்த தின சுறுசுறுப்பு இல்லாததால், பூ விற்பனை சற்று குறைவாகவே உள்ளது.மல்லிகை பூ, 1.50 டன், முல்லை, 1.30 டன் வரத்தாகியுள்ள நிலையில்,நேற்று மல்லிகை பூ கிலோ, 300 ரூபாய்க்கும், முல்லை 220 ரூபாய்க்கும் விற்றது.அதே நேரம், காற்றின் வேகம் காரணமாக பூ உதிர்வது அதிகரித்துள்ளதால், செவ்வந்தி 350 ரூபாய்க்கும், அரளி 320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.'பூ வரத்து அதிகமாக உள்ளது. வரும் வாரத்தில் ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களுக்கு முன் பூ விலை உயரலாம்,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்