உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மறுகூட்டல்  முடிவு இன்று வெளியீடு

மறுகூட்டல்  முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே, 10ம் தேதி வெளியானது. விடைத்தாள் நகல் பெற்ற மாணவ, மாணவியர், தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக கருதினால், மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அழைப்பு விடுத்தது.திருப்பூர் மாவட்டத்தில், 181 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முடிவுகள் இன்று (27ம் தேதி) மதியம் வெளியாக உள்ளது. விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மறுமதிப்பீடு, மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் மட்டும் இணையதளத்தில் பதிவெண்,பிறந்ததேதி விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ