உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை வெள்ளக்காடானது

ஆக்கிரமிப்பால் அடைபட்ட சாலை வெள்ளக்காடானது

அவிநாசி;அவிநாசி, தத்தனுார் ஊராட்சி பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆவாரங்காடு சாலை மழை வெள்ளத்தில் மூழ்கியது; வாகனங்கள் தத்தளிக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவிநாசி அருகே தத்தனுார் ஊராட்சி பகுதியில், பிற இடங்களை காட்டிலும் கூடுதல் மழை பெய்து வருகிறது.ஏற்கனவே, பெய்த மழையில், ஊராட்சியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி ததும்புகின்றன. கடந்த இருநாளாக பெய்து வரும் மழையில், கோபி - கோவை நெடுஞ்சாலையில், ஆவாரங்காடு பகுதியில் மழைநீர் சூழ்ந்து, வெள்ளம் பெருக்கெடுத்தது; சாலை முழுக்க மழைநீர் சூழ்ந்ததால், வாகனங்கள் நீரில் தத்தளித்தன.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'இந்தசாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.சாலையில் தேங்கும் மழைநீர், அந்த வடிகால் வழியாக, அருகேயுள்ள பாலத்தில் வெளியேறி விடும். ஆனால், சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து மழைநீர் வெளியேறாத வகையில் மண் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.இந்த ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினால் மட்டுமே, மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ