உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அபார ஆட்டத்தால் வெற்றிக்கனி பறித்த பள்ளிகள்

அபார ஆட்டத்தால் வெற்றிக்கனி பறித்த பள்ளிகள்

திருப்பூர் : தெற்கு குறுமைய மாணவியர் ேஹண்ட்பால் போட்டியில், 14 மற்றும், 19 வயது பிரிவு இரண்டிலும், வள்ளி வித்யாலயா அணி வெற்றி பெற்று அசத்தியது.தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் ேஹண்ட்பால் போட்டி, ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாணவர், 14 வயது பிரிவில், எட்டு, 17 மற்றும், 19 வயது முறையே, ஏழு மற்றும் நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின.பதினான்கு வயது மாணவர் பிரிவில், அல்அமீன் மெட்ரிக் பள்ளி, 7 - 6 என்ற புள்ளிக்கணக்கில், வள்ளி வித்யாலயா பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், அலகுமலை வித்யாலயா அணியை, 10 - 16 என்ற புள்ளிக்கணக்கில், பிரன்ட்லைன் மெட்ரிக் அணி வென்றது. 19 வயது பிரிவில், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணி, 8 - 4 என்ற புள்ளிக்கணக்கில், அலகுமலை வித்யாலயா அணியை வென்றது.மாணவியர் 14 வயது பிரிவில், மூன்று பிரிவுகளில், 14 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றன. 14 மற்றும், 19 வயது பிரிவு இரண்டிலும், வள்ளி வித்யாலயா அணி, 5 - 3 என செயின்ட் ஜோசப் பள்ளி அணியையும், 7 - 4 என ஸ்ரீ அலகுமலை வித்யாலயா பள்ளி அணியையும் வென்றது. 17 வயது பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 11 - 0 என்ற புள்ளிக்கணக்கில், ஜெய்ரூபா மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.

போட்டி ஒத்திவைப்பு

திருப்பூர் பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கால்பந்து போட்டி நடந்தது. 14 வயது முதல் அரையிறுதி போட்டியில், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில், கிட்ஸ் கிளப் பள்ளியை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி போட்டிக்கு பிளாட்டோஸ் அகாடமி - பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி அணிகள் முன்னேறின.பதினேழு வயது பிரிவினருக்கான முதல் அரையிறுதி போட்டியில், சென்சுரி மெட்ரிக் பள்ளி அணி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி அணியை, 1 - 0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டிக்கு, செயின்ட் ஜோசப் மெட்ரிக், விகாஸ் வித்யாலயா அணிகள் முன்னேறின.பதினான்கு மற்றும் பதினேழு வயது பிரிவினருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டி, கதிரவன் மெட்ரிக் - செயின்ட் ஜோசப் மெட்ரிக் இடையே நடக்க பத்தொன்பது வயது பிரிவினருக்கான இறுதி போட்டி, வெளிச்சமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. வேறு ஒரு நாளில் போட்டி நடக்குமென அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ