உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் கிடந்த போன் ஒப்படைத்த ஆசிரியர்

ரோட்டில் கிடந்த போன் ஒப்படைத்த ஆசிரியர்

அவிநாசி;சேவூர் அடுத்த தண்டுக்காரன்பாளையம் அருகே ராமியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல், 36. இவர் செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.நேற்று சேவூரில் இருந்து தனது வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். கெம்மநாயக்கன்புதுார் அருகே செல்லும்போது, ரோட்டில் மொபைல்போன் கிடந்ததை பார்த்தார்.மொபைல்போன் உரிமையாளர், பள்ளேபாளையம் ஊராட்சி, தென்பொம்முடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு போன் செய்து மொபைல்போனை பெற்றுச்செல்லுமாறு கூறினார்.அவரிடம் தங்கவேல் மொபைல் போனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை