| ADDED : ஆக 04, 2024 05:10 AM
அவிநாசி : அவிநாசி வட்டம், வேட்டுவபாளையம் ஊராட்சியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திடலில் கோவை ஸ்ரீ அம்மன் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சியும், காராளன் கலைக்குழுவினரின் 50வது கம்பத்தாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள், பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை செயலாளர் குமரலிங்கம், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தரராஜ், இலக்கிய துறை இயக்குனர் அனந்த கிருஷ்ணன், இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.ஆ.குரும்பபாளையம், வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக சிறுமிகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு ஸ்ரீ அம்மன் கலைக்குழுவின் பயிற்சியாளர்கள் குணசேகரன், சரோஜினி, கோகிலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.அம்மன் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக தலைவர் நஞ்சுக்குட்டி, ஒயிலாட்ட ஆசிரியர்கனகசபாபதி, பம்பை குழுவினர் செல்வம், வள்ளி கும்மி ஆசிரியர் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பயிற்சியாளர் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.காராளன் கலைக்குழுவை சேர்ந்த பிரவீன், ஹரிஷ், நித்தீஸ்வரன், மனோஜ் ஆகியோர் கம்பத்தாட்டம் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர்.இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.