உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருக்குறள் கும்மியாட்டம் அரங்கேற்றம்

திருக்குறள் கும்மியாட்டம் அரங்கேற்றம்

அவிநாசி:திருமுருகன்பூண்டியில் உள்ள தன வர்ஷினி அவென்யூ ரிசர்வ் சைட் பகுதியில் வள்ளி முருகன் கலைக்குழு சார்பில் கும்மி கலை வரலாற்றில் முதன்முறையாக திருக்குறள் கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.துரைசாமி நகர், தன வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்டு வரலாற்று தொடர்புடைய கிராமிய பாடல்களுக்கு திருக்குறள் விளக்க உரையுடன் கும்மியாட்டம் நிகழ்த்தினர். இதற்காக ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி அளித்தனர்.இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ