உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரசன்ன விநாயகர் கோவிலில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

பிரசன்ன விநாயகர் கோவிலில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி

உடுமலை:உடுமலையில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது.உடுமலை கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில், பிரசன்ன விநாயகர் கோவிலில், 799-வது நிகழ்ச்சியாக, திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.கார்த்திகை விழா மன்ற செயலாளர் அங்கு பாலசுப்ரமணியன் வரவேற்றார். திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்த அறிஞர் ஜெய்சிங் லிங்கவாசகம் தலைமை வகித்தார். டாக்டர் திருஞானசம்பந்தம், ஆன்மீக பேரவை தலைவர் கலாவதி முன்னிலை வகித்தனர்.இதில், தொண்டர் சீர் பரவுவார் குருகுல இசைவாணிகள் மற்றும் இசைவாணர்களின் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருஏடகத்திலுள்ள ஏடகநாதர் கோவில் ஓதுவார் அர்சித் ஓதுவார், மாத்தூர் ஐநூற்றீஸ்வர் கோவில் ஓதுவார் முத்துக்குமார் ஆகியோரின் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை, மன்றத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி, துணைத்தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி