| ADDED : ஏப் 27, 2024 12:10 AM
உடுமலை, ஏப். 27-உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை கோவில் உண்டியல்கள் எண்ணிக்கையில், 2.62 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கோவை, திருப்பூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். மலை மேல் பஞ்சலிங்கம் நீர்வீழ்ச்சியும், பஞ்சலிங்கம் கோவிலும் அமைந்துள்ளது.பெருமை வாய்ந்த இக்கோவிலில், 12 உண்டியல்கள் எண்ணிக்கை நேற்று நடந்தது. உண்டியல்களில், பக்தர்கள், 2 லட்சத்து, 62 ஆயிரத்து, 288 ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், கோசாலை உண்டியல் வாயிலாக, ரூ, 638 காணிக்கை செலுத்தியிருந்தனர்.கடந்த மார்ச், 14-ம் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில், 2.62 லட்சம் ரூபாய் காணிக்கையாக கோவிலுக்கு கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையின் போது, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.