உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர்களுக்கு தி.மு.க., நன்றி

வாக்காளர்களுக்கு தி.மு.க., நன்றி

திருப்பூர்: ஈரோடு லோக்சபா தொகுதியில் தி.மு.க.., வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி, ஈரோடு தொகுதியில் இடம் பெற்றுள்ள தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், கவுன்சிலர் அன்பழகன் மற்றும் கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். முக்கிய வீதிகளில் மேள தாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் கட்சியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடை வீதியில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருப்பூர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி., சுப்பராயனுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை