உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால் டாக்சி நிறுவனம் மீது புகார் சுற்றுலா வாகன ஓட்டிகள் போராட்டம்

கால் டாக்சி நிறுவனம் மீது புகார் சுற்றுலா வாகன ஓட்டிகள் போராட்டம்

திருப்பூர்:திருப்பூரில் இயங்கும், ஒரு கால் டாக்சி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் நகரப்பகுதியில் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயங்குகின்றன. பகுதிவாரியாக இந்த வாகன டிரைவர்கள் பல்வேறு சங்க அமைப்புகளில் உள்ளனர். நகரப் பகுதியில் இயங்கும் கால் டாக்சி நிறுவன மேலாளர் மீது பல்வேறு புகார்களை கூறி, அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று காலை அனைத்து சங்க கூட்டமைப்பு வாயிலாக சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று சுற்றுலா வாகனங்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டன.இது குறித்து, சங்க நிர்வாகிகள் சரவணன், சக்திவேல் கூறியதாவது:இந்த கால் டாக்சியின் திருப்பூர் கிளை மேலாளர் இங்குள்ள மற்ற சுற்றுலா வாகன டிரைவர்களின் தேவையற்ற பகை மற்றும் மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார். உரிய அங்கீகாரம் இன்றி, நகரப் பகுதி மட்டுமின்றி அனைத்துபகுதியிலும் வாகனங்கள் இயக்கப்படுகிறது.உரிமம் இல்லாத ஆட்கள் காரை இயக்குகின்றனர். பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. சட்ட விரோத நடவடிக்கையிலும் இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. பல பகுதிகளிலும் வழக்குகள் உள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் அந்நிறுவன அலுவலகத்தை மூட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பேரில் விசாரித்தும், உரிய ஆலோசனை நடத்தவும் உதவி கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.---திருப்பூர் வாடகை கார் ஓட்டுநர்கள் கார்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ