உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா

வியாபாரிகள் சங்க கொடியேற்று விழா

அவிநாசி;அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா சங்க கொடியை ஏற்றினார். விழாவுக்கு மண்டல தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். செயலாளர் அபுசாலி, பொருளாளர் தனசேகரன், துணைத் தலைவர்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரம், துணைச் செயலாளர்கள் தேவதாஸ், முத்துக்குட்டி, முத்துலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர். சேவூரில் அனைத்து வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா நடந்தது. மாநில தலைவர் விக்கிரம ராஜா சிறப்புரையாற்றினார். சேவூர் கிளை தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன் வரவேற்றார். பேரமைப்பு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கிளை பொருளாளர் செல்வசிங், துணைத் தலைவர் விஜயானந்தன், ரத்னம், துணைசெயலாளர் கனக சண்முகம், ஜெய்லாப்தின் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ