உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாநகர, மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகரில் இருந்த பல இன்ஸ்பெக்டர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதில், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கோவை போன்ற பகுதியில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் திருப்பூருக்கு வந்தனர். அவர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கப்பட்டு கமிஷனர் லட்சுமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், கொங்கு நகர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு கோமதி, தெற்கு குற்றப்பிரிவுக்கு ஹரிகிருஷ்ணன், மத்திய குற்றப்பிரிவுக்கு பிரேமா, வீரபாண்டி குற்றப்பிரிவுக்கு சுரேஷ், அனுப்பர்பாளையத்துக்கு சசிகலா, நல்லுார் குற்றப்பிரிவுக்கு இளங்கோ, குற்ற ஆவண காப்பக பிரிவுக்கு பதுருன்னிசா பேகம், சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ராஜேஸ்வரி மற்றும் கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு ஜமுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்