உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து கழக அலுவலக கூரை டமார் தொழிலாளி காயம்

போக்குவரத்து கழக அலுவலக கூரை டமார் தொழிலாளி காயம்

திருப்பூர்;திருப்பூர் போக்குவரத்து கிளை - 2 அலுவலக மேற்கூரையில் பூசப்பட்டிருந்த சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது; இதில், தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:அதிகாரிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு, வசதிகளை செய்து கொள்வது ஏற்புடையது தான். அதேநேரம், தொழிலாளர் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்.திருப்பூர் மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் உள்ள தொழிலாளர் ஓய்வறை, உணவுக்கூடம், அலுவலக அறைகள், பணிமனை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளது.பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக பராமரித்து, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம்.அனைத்து கிளைகளில் உள்ள கட்டடங்களின் ஸ்திரத்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அதன் ஆயுள் காலம் உறுதி செய்யப்பட வேண்டும்.ஆய்வுக்குழுவில், தொழிற்சாலை ஆய்வாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஆய்வுக்குழு பரிந்துரைகளை, அனைத்து தொழிலாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். திருப்பூர் மண்டலத்தில் உள்ள பணிமனைகளில் பழுதடைந்த கட்டடங்கள், சுற்றுச்சுவரை உடனடியாக சரி செய்ய வேண்டும்.ஒப்பந்த முறையில் நடைபெறும் பணிகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.அனைத்து கிளை வளாகங்களில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால் கட்டமைப்பு சரி செய்ய வேண்டும்; பணிமனை தளங்களில் மராமத்து பணி செய்ய வேண்டும் என, நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ