உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காற்றுக்கு மரம் முறிந்தது: டிரான்ஸ்பார்மர் சேதம்

காற்றுக்கு மரம் முறிந்தது: டிரான்ஸ்பார்மர் சேதம்

அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, சிந்தாமணி பஸ் ஸ்டாப் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக காய்ந்த நிலையில் இலவம் பஞ்சு மரம் ஒன்று பல நாட்களாக இருந்தது. இதனை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.நேற்று மாலை வீசிய கோடை காற்றுக்கு மரம் முறிந்து முழுவதுமாக அருகில் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பிகள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மரம் முறிந்து விழுந்த தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சேதமான டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை