உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறந்த எஸ்.ஐ.,க்கு மரியாதை

இறந்த எஸ்.ஐ.,க்கு மரியாதை

உடுமலை;உடுமலை அருகே, உடல் நலக்குறையால் இறந்த எஸ்.ஐ., உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.மடத்துக்குளத்தைச்சேர்ந்தவர் செல்வம், 54. போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஆக இருந்த அவர், உடுமலை தளி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மடத்துக்குளத்தில், அரசு மரியாதையுடன், 30 குண்டுகள் முழங்க, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. டி.எஸ்,பி., சுகுமாறன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நிர்மலா தேவி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை