உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி

உடுமலை நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, மவுன ஊர்வலம் நடந்தது.உடுமலை நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, காமராஜர் சிலையிலிருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை மவுன ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.நகரச்செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். நகராட்சித்தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர் குமார், கவுன்சிலர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்து, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து, அமுதபாரதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை