உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருப்பூர்;'வரும், 20ம் தேதி, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் - திருச்சி வழித்தடத்தில், லாலபேட்டை - குளித்தலை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி, தண்டவாள பராமரிப்பு நடக்கிறது.இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) வரும், 20ம் தேதி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும்; சீதலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாது.மறுமார்க்கமாக திருச்சிக்கு பதிலாக, மதியம், 2:20 க்கு கரூரில் இருந்து ரயில் புறப்படும்.இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ