உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூட்டையாக குவிகிறது துளசி விலை குறைந்தது 

மூட்டையாக குவிகிறது துளசி விலை குறைந்தது 

திருப்பூர்;விளைச்சல் அதி கரித்து, மூட்டை மூட்டையாக வந்து குவிவதால், துளசி விலை குறைந்துள்ளது.வழக்கமாக ஒரு கட்டு பத்து ரூபாய்க்கு துளசி விற்கப்படும். கடந்த நான்கு நாட்களாக மூன்று கட்டு, 20 ரூபாய், ஒரு கட்டு, ஐந்து முதல் ஏழு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காடுகளில் இயற்கையாக தழையும் துளசி, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களுடன் சேர்த்து, மாலை கட்ட உதவுகிறது.இவற்றை தேடிப் பறித்து, பெண்கள் பலர் விற்பனைக்கு திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு விற்க கொண்டு வருகின்றனர். வழக்கமாக, 40 முதல், 60 கட்டு ஒவ்வொருவரும் கொண்டு வருவர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மழை அவ்வப்போது பெய்வதுடன், பகலில் வெயில் கொளுத்துகிறது. இரவு, அதிகாலை குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.இதனால், துளசி விளைச்சல் அதிகரித்து, வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது; விலையும் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ