உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாதுகாப்பற்ற நிழற்குடை

பாதுகாப்பற்ற நிழற்குடை

பொங்கலுார்:பொங்கலுார் அருகே அலகுமலை அடிவாரத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம் உள்ளது.தரமற்ற கட்டுமானத்தால் நிழற்குடையின் மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. மழை பெய்தால் பயணிகள் பாதுகாப்பான இடங்களைத் தேடி செல்வர். மழைக்கு நிழற்குடை அருகே பயணிகள் சென்றால் இடிந்து தலையில் விழும் அபாயம் உள்ளது.ஆபத்தான நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ