உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணையில் வேருடன் சரியும் மரங்கள்

திருமூர்த்தி அணையில் வேருடன் சரியும் மரங்கள்

உடுமலை;உடுமலை திருமூர்த்தி அணையில், வேருடன் சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், 50 ஆண்டுகளுக்கு முன், கரை அரிப்பை தடுக்கும் வகையில், யூகலிப்பிடஸ் மரங்கள் நடவு செய்யப்பட்டன.தற்போது, அவை உயரமாக வளர்ந்துள்ள நிலையில், காற்றுக்கு தாங்காமல், பெரிய அளவிலான இம்மரங்கள் வீணாக அணையின் நீர் தேங்கும் பரப்பில் விழுந்து வீணாகி வருகிறது.அமணலிங்கேஸ்வரர் கோவில், படகு துறை என, அணையின் கரைப்பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளதால், இம்மரங்களால் பொதுமக்களும் பாதித்து வருகின்றனர்.இவற்றை பொது ஏலம் விட்டு, அகற்றவும், நீர் மருது உள்ளிட்ட மண்ணின் மரபு சார்ந்த மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்து, பொதுப்பணித்துறையினர் பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை