உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குருபூஜையில் வள்ளி கும்மி 300 கலைஞர்கள் பங்கேற்பு

குருபூஜையில் வள்ளி கும்மி 300 கலைஞர்கள் பங்கேற்பு

உடுமலை;சின்னபாப்பனுாத்து கருப்பராயன் கோவில் குருபூஜை விழாவையொட்டி, வள்ளி கும்மியாட்டம் நடந்தது.உடுமலை அருகே பெரியபாப்பனுாத்து ஊராட்சிக்குட்பட்ட சின்னபாப்பனுாத்து கிராமத்தில், கருப்பராயன் கோவில் உள்ளது. கோவிலில், குரு பூஜை விழா நடந்தது.விழாவையொட்டி, ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கலைக்குழு சார்பில், வள்ளி கும்மியாட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மயில்சாமி தலைமை வகித்தார். வள்ளி கும்மியாட்ட கலைஞர்கள் பாலசுப்பிர மணியன், கந்தசாமி, தேவராஜ், பிரபு உள்ளிட்டோர் வழிநடத்தினர்.கும்மியாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். பெரியபாப்பனுாத்து ஊராட்சி தலைவர் கரிச்சிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !