உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கான்டூர் கால்வாயில் நீர் திறப்பு அமைச்சர் தகவல்

கான்டூர் கால்வாயில் நீர் திறப்பு அமைச்சர் தகவல்

திருப்பூர்:கான்டூர் கால்வாயிலிருந்து இந்த வாரம், திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட உள்ளது.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிக்கை:பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணை வாயிலாக 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு 49 கி.மீ., நீளமுள்ள வாய்க்கால் மூலம் நீர் கொண்டு செல்லப்படுகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பல ஆண்டுகளாக இந்த வாய்க்கால் சேதமடைந்து சீரமைக்காமல் இருந்தது. கடந்த 2010ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. அது வரை 600 கன அடி நீர் மட்டுமே சென்ற வாய்க்காலில் ஆயிரம் கன அடி நீர் செல்ல வழி செய்யப்பட்டது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டாக இந்த வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமலும், இயற்கை சீற்றத்தாலும் வாய்க்கால் சேதமடைந்தது. தற்போது தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த மே மாதம் வரை இந்த வாய்க்காலில் நீர் எடுக்கப்பட்டதால் பராமரிப்பு பணிகள் அதன் பின்பே துவங்கப்பட்டது. தற்போது பணிகள் நடக்கிறது. பாசனப் பயன்பாட்டுக்காக ஆக., முதல் வாரத்தில் கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.

பழனிசாமி அறிக்கை வேடிக்கை

''சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திருமூர்த்தி அணைக்கு நீர் திறப்பது தாமதமாகிறது என யாரோ சொன்ன தகவலின் பேரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் பணியாற்றிய அவர் இது போல் அறிக்கை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது'' என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ