உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டார்ட் அப் ரத யாத்திரைக்கு வரவேற்பு

ஸ்டார்ட் அப் ரத யாத்திரைக்கு வரவேற்பு

திருப்பூர்;இந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், 'எம்.எஸ்.எம்.இ., மற்றும் 'ஸ்டார்ட் அப்' விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று, திருப்பூர் வந்தது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' தொழில்கள், பிற தொழில் புரியும் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில், பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எம்.எஸ்.எம்.இ., மற்றும் 'ஸ்டார்ட் அப்' கமிட்டி ஏற்பாட்டில், விழிப்புணர்வு யாத்திரை, ஜூன் 27ம் தேதி பெங்களூருவில் துவங்கியது. அதாவது, 100 நாட்கள், 100 நகரங்கள், 100 நிகழ்ச்சிகள் என்ற திட்டமிடலுடன், ரத யாத்திரை நடந்து வருகிறது.திருப்பூர் ஆடிட்டர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கை தொடர்ந்து, யாத்திரை துவக்கி வைக்கப்பட்டது. சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி பொதுமேலாளர் ராமச்சந்திரன், 'நிப்ட்-டீ அடல் இன்குபேஷன் மைய முதன்மை செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர், கொடியசைத்து வரவேற்றனர்.நிகழ்ச்சிக்கு, திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் உதவி திட்டம், மானியம், 'ஸ்டார்ட் அப்' துவக்கத்துக்கான வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மகேஷ் செய்திருந்தார்.விழிப்புணர்வு ரத யாத்திரை, 15வது மாவட்டமாக திருப்பூர் வந்திருந்தது; இன்று காலை, கோவை மாவட்டமும், மாலையில் ஈரோடு மாவட்டமும் செல்ல திட்டமிட்டுள்ளதாக, ஆடிட்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ