உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிக்கண்ணாவுக்கு பி டபுள் பிளஸ் எதனால் கிடைக்கவில்லை ஏ கிரேடு?

சிக்கண்ணாவுக்கு பி டபுள் பிளஸ் எதனால் கிடைக்கவில்லை ஏ கிரேடு?

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின்(நாக்) 'ஏ' கிரேடு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தது. 'நாக்' குழுவினர் இரண்டு நாட்கள் கல்லுாரி உள்கட்டமைப்பு வசதி, இடவசதி, வகுப்பறை, பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தினர். ஒரு வாரத்துக்கு பின், நேற்றுமுன்தினம் ஆய்வின் முடிவுகள் குழுவினரால் வெளியிடப்பட்டது. 'பி' அந்தஸ்தில் இருந்த கல்லுாரி, 'பி டபுள் பிளஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில்,'அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து, 2029 இறுதியில் 'ஏ' கிரேடுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது,' என்றார்.காரணம் என்ன?'நாக்' குழுவில், நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர். நால்வர் நான்கு குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு பாடப்பிரிவாக அலசி ஆராய்ந்து நாள் முழுதும் ஆய்வு நடத்தினர். ஓரிரு வகுப்புகளில் மட்டுமே 'டிஜிட்டல், 'பவர்பாயின்ட்' பிரசன்டேசன் வகுப்பறை இருந்துள்ளது.பெரும்பாலானவற்றில் அத்தகைய வசதி இல்லை. இதனால்தான், 'ஏ' கிரேடு கிடைக்காமல், 'பி டபுள் பிளஸ்' தரச்சான்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை