உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மிளகாய் விலை உயர்வு ஏன்? காரணம் கூறும் விவசாயிகள்

மிளகாய் விலை உயர்வு ஏன்? காரணம் கூறும் விவசாயிகள்

பொங்கலுார்:பச்சை மிளகாய் சராசரியாக, 40 முதல், 60 ரூபாய் வரை விலை போகும். தற்போது கிலோ, 110 ரூபாய்க்கு விலை போகிறது. விளைச்சல் குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம்.நோய் பாதிப்பு, வறட்சி போன்ற காரணங்கள் இருந்தாலும் புதிய ரகங்களால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைகாசி பட்டத்தில் நடவு செய்யப்படும் மிளகாய் ஆடி முதல் தை மாதம் வரை அறுவடை செய்யப்படுவது வழக்கம்.காய்ப்புக்கு வர அதிக நாட்கள் ஆகும்; குறைவான அளவிலேயே காய்க்கும் என்பதால் விவசாயிகள் உயர் ரகத்திற்கு மாறினர். இது தற்பொழுது விளைச்சலை கடுமையாக பாதித்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது:புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் அதிக காய்கள் பிடித்தது. விரைவாக அறுவடைக்கு வந்தது. இதனால் புதிய ரகங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினோம். நாட்டு ரகம் இருபோகம் காய்த்தது. உயர் ரகம் ஒரு போகத்துடன் முடிந்து விடுகிறது.தற்போது நாற்று பண்ணைகள் கொடுக்கும் நாற்றுகளையே வாங்கி நடவு செய்கிறோம். 15 நாட்களுக்கு ஒரு முறையே அறுவடை செய்ய முடியும்.இரண்டு அறுவடையுடன் முடிந்து விடுகிறது. அதன் பின் செடி காய்ப்பதில்லை. காய்த்தாலும் தரம் இருப்பதில்லை. அதிக அளவில் நோய் தாக்குகிறது. இதனால் மிளகாய் விளைச்சல் சரிந்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி