உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புடலைக்கு விலை உயருமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள் 

புடலைக்கு விலை உயருமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள் 

உடுமலை: மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புடலங்காய்க்கு தற்போதைய சீசனில், போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.உடுமலை சின்னவீரம்பட்டி, ஜல்லிபட்டி, ஆண்டியகவுண்டனுார், கொங்கல்நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக பந்தல் காய்கறி சாகுபடி செய்கின்றனர். விளைநிலங்களில், நிரந்தர பந்தல் அமைத்து, ஆண்டு முழுவதும், பாகற்காய், புடலை, பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கின்றனர். மழைக்காலத்தில் இச்சாகுபடியில், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, விளைச்சல் குறையும். இந்தாண்டு பரவலாக புடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அறுவடை துவங்கியுள்ள நிலையில், உடுமலை உழவர் சந்தையில், தற்போது, புடலங்காய் கிலோவுக்கு, 25-30 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. விவசாயிகள் கூறுகையில், 'கடந்தாண்டு, புடலை கிலோவுக்கு, 40 ரூபாய்க்கும் அதிகமான விலை கிடைத்தது. நடப்பு சீசனில், விலை குறைந்துள்ளது. மழையால் உற்பத்தி பாதித்துள்ள நிலையில், விரைவில், விலை உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்