உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 525 மாணவியருக்கு பணியாணை

525 மாணவியருக்கு பணியாணை

திருப்பூர்;'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 525 நபர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது.முன்னதாக, வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். கடந்த 2022 - 2023ம் கல்வியாண்டில், மாவட்டத்தில் உள்ள, 23 கல்லுாரியில் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முடித்த, 1,444 மாணவியர் முகாமில் பதிவு செய்து, பங்கேற்றனர். வேலைவாய்ப்பு தர, 53க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தின. காலை 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த முகாமில், மொத்தம், 525 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணியாணை மாலையில் வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், எல்.ஆர்.ஜி., கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர், நான்முதல்வன் திட்ட மாவட்ட மேலாளர் ஓம்பிரகாஷ், கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை, கருப்பையா, வெங்கட்ராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி