உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ சேவை மேம்பட  மாவட்டத்தில் பணிகள்

மருத்துவ சேவை மேம்பட  மாவட்டத்தில் பணிகள்

திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில், கடந்தாண்டு, 90 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகள் நடந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை, 2ம் நிலை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி, 27 கோடி ரூபாய் மதிப்பிலான, தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்பட்டது; 12.86 கோடி ரூபாய் மதிப்பிலான, மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.தாராபுரம் அரசு மருத்துவமனை, 24 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கட்டுமான பணி நடந்துள்ளது. காங்கயம் அரசு மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, 12 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்துள்ளன.அவிநாசி அரசு மருத்துவமனையில், மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு கட்டட பணிகளுக்கு, 5.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளது. உடுமலை அரசு மருத்துவமனையில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 90 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணி நடந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ