உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உலக பட்டினி தினம் உணவு வழங்கல்

உலக பட்டினி தினம் உணவு வழங்கல்

திருப்பூர்:உலக பட்டினி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எளிய மக்களுக்கு அமைப்பினர் உணவு வழங்கினர்.திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் வகையில் இச்சேவை துவங்கப்பட்டது. இந்த வாகனத்தை தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. மலபார் கோல்ட் நிறுவன அலுவலர்கள் மற்றும் கட்சியினர் பட்டினி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். தமிழக வெற்றி கழகம் சார்பில், தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில், 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை வகித்து இதனை துவங்கி வைத்தார். தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ