அவிநாசி;இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றிய பிரச்னை, கத்தி குத்தில் முடிந்தது. இதில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர், பெருமாநல்லுார அருகேயுள்ள வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் மோகன் மகன் கோபி 24. இவர் தனது நண்பரான சிவா 24, மற்றும் சிலருடன் பழங்கரை அருகே கல்லுமடை குட்டை பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடி கொண்டிருந்தனர்.அதேநேரம், ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி யோகராஜின் மகன் ஜெயராம் 22, சவுந்திரராஜன் மகன் பாஸ்கரன் 22, மற்றும் லட்சுமி கார்டனை சேர்ந்த, 18 வயது சிறுவன் ஆகிய மூவரும் அதே பகுதிக்கு வந்தனர். அப்போது, கோபியின் மற்றொரு நண்பரான வசந்தகுமாருக்கு, சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் போல, 18 வயது சிறுவன் பேசியது தெரிந்தது.இதனையறிந்த, கோபி, சிவா, ஜெகதீஷ் ஆகியோர், 1ம் தேதி சிறுவன் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனுக்கு ஆதரவாக வந்த ஜெயராம், பாஸ்கரன் ஆகியோர், கோபி, சிவா ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளனர்.இருவரும் சத்தம் போடவே மூவரும் தப்பி ஓடியுள்ளனர். அருகிலிருந்தவர்கள், இருவரையும், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து, அவிநாசி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, ஜெயராம், பாஸ்கரன், 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.