உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாறுமாறாக ஓடிய கார் 2 தொழிலாளர் படுகாயம்

தாறுமாறாக ஓடிய கார் 2 தொழிலாளர் படுகாயம்

திருப்பூர்:திருப்பூர், ராதா நகரை சேர்ந்தவர்கள் பாலமுருகன், 32, ஆறுமுகம், 60. கட்டட தொழிலாளர்கள். இவர்கள் அவிநாசி ரோடு காந்தி நகர் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று, 12:00 மணியளவில், இருவரும் ரோட்டோரம் நின்று டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக தாறுமாறாக வந்த கார், இருவர் மீது மற்றும் அங்கிருந்த இரண்டு டூவீலர் மீது மோதி, மரத்தின் மீது மோதியது. அதில், இருவரும் காயமடைந்தனர்.இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். டூவீலரும் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் காந்தி நகர், நாராயணசாமி நகரை சேர்ந்த சாகுல் ஹமீது, 32 என்பது தெரிந்தது. மதுபோதையில் இருந்தது தெரிந்தது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி